மத்ஹப்இமாம்களின் சிறப்பு

#இமாம்களின்_உழைப்பு#

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ,

நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப் தோன்றியது. மத்ஹப் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் அமல்களை ஒரு மனிதன் நிறைவேற்றுவதற்கே! மத்ஹப்பில் 4 வழிகள் உள்ளது அந்த நான்கு வழிகளும் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் காட்டிதந்ததே.. அவை அனைத்தும் நேரான பாதைகளே.. அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப் பிரிவாக தெரியும்.

ஹதீத் தொகுக்கப்பட்டது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களுக்கு பின் ஏறத்தாள 190 ஆண்டுகளுக்கு பின்.

(கீழ் பதியும் ஆண்டுகள் அனைத்தும் ஆங்கில வருடப்பிறப்பு காரணம் ஹிஜ்ரி ஆண்டில் கணக்கிடும் வசதி என்னிடம் இல்லை)

விடயத்திற்கு வருவோம்!

1. ஹனபி மத்ஹப் = அபு ஹனிபா நுமன் இப்னு தாபித் இப்ன் ஜுப இப்ன் மர்ழுபான். வாழ்ந்த காலம் (702 - 772)

2. மாலிகி மத்ஹப் =மாலிக் இப்ன் அனஸ் இப்ன் மாலிக் இப்ன் அமீர் அழ அச்பஹி . வாழ்ந்த காலம் (711-795)

3. ஷாபி மத்ஹப் =அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அல் ஷாபி . வாழ்ந்த காலம் (767-820)

4. ஹன்பலி மத்ஹப் = அஹ்மத் பின் முஹம்மது பின் ஹன்பல் அபு அப்துல்லாஹ் அல் ஷய்பானி . வாழ்ந்த காலம் (780-855)

மத்ஹப்பை தொகுத்த இமாம்களின் வாழ்ந்த காலம் அனைத்தும் ஒரே காலங்கள்தான் . மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால் இவர்கள் 4 இமாம்களிடமும் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்று அடித்துக்கொண்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்! ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது புதிதாக 1 கூட தோன்றவில்லை. இதுவே தக்க சான்று மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு . அந்த 4 இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹுத்தாலா வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான், வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

சரி அடுத்து ஹதீதிற்கு வருவோம்!

அல்ஹம்துலில்லாஹ் 6 மிகப்பெரிய ஹதீத் க்ரிந்தங்களை தொகுத்த 6 இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!! அந்த 6 இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே புத்தகத்தில் ஹதீதினை பதிய தொடங்கினார்கள்!

1. சஹிஹ் அல் புகாரி = அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் இப்ன் இப்ராகிம் இப்ன் அல் முக்ஹிற இப்ன் பர்டிழ்பாஹ் அல் ஜுபிஅல் புகாரி .வாழ்ந்த காலம் (810-870)

மத்ஹப் = ஷாபி

தொகுத்த ஹதீத்கள் = 7275

2. சஹிஹ் முஸ்லிம் = அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் இப்ன் அல் அஜ்ஜாஜ் இப்ன் முஸ்லிம் இப்ன் வர்த் இப்ன் கவ்ஷாத் அல் குஷய்ரி அன் நய்சபுரி . வாழ்ந்த காலம்(815-875)

மத்ஹப் = ஷாபி

தொகுத்த ஹதீத்கள் = 2200

3. அபு தாவூத் = அபு தாவூத் சுலய்மான் இப்ன் அல் அசாத் அல் அழ்டி அல் சிஜிச்தனி . வாழ்ந்த காலம்(817-889)

மத்ஹப் = ஹன்பலி

தொகுத்த ஹதீத்கள் = 4800

4.அல் திர்மிதி = அபு இசா முஹம்மது இப்ன் இசா அஸ் சுலமியாத் தரிர் அல் புகி அட் திர்மிதி. வாழ்ந்த காலம் (824-892)

மத்ஹப் = ஷாபி

தொகுத்த ஹதீத்கள் = 3956

5. அல் நாசாஈ = அஹ்மத் இப்ன் சுஹைப் இப்ன் அலி இப்ன் சினன் அபு அபு அர் ரஹ்மான் அல் நாசாஈ . வாழ்ந்த காலம் (829-915)

மத்ஹப் = ஹன்பல்

தொகுத்த ஹதீத்கள் = 5270

6. இப்ன் மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் யாஜித் இப்ன் மாஜா அல் ராபி அல் கஜ்வினி. வாழ்ந்த காலம்(824-887)

மத்ஹப் = ஷாபி

தொகுத்த ஹதீத்கள் = 4000 கும் மேற்பட்டவைகள்.

தீர்விற்கு வருவோம்!

மத்ஹப் குப்பை, இமாம்களை பின்பற்றக்கூடாது, குர்ஆன் மற்றும் ஹதீத் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார் அந்த ஹதீதுகளும் மத்ஹபை பின்பற்றிய நல்லோர்களால் தான் தொகுக்கப்பட்டது என்று உணருவார்களா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?