முகமெல்லாம் முஹம்மது நபிபோல்

*முகமெல்லாம் முஹம்மது நபிபோல்...*

முகமெல்லாம் முஹம்மது நபி போல் முகமாகுமா!
அகமெல்லாம் அஹ்மது நபி போல் அகமாகுமா!
மறையெல்லாம் நபிவழி வந்த மறையாகுமா!
உரையெல்லாம் திருநபி சொன்ன உரையாகுமா!
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

அல்லாஹ்வும் அவனுடனே வானவர்களும்
அயராமல் மொழிவாரே ஸலவாத் நிதம்
அடியோரே நீரும் உரைப்பீர் ஸலவாத்தையே நபிமேல் ஸலவாத்தையே
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

அர்ரஹ்மான் அவனருளால் தந்த நபி
அகிலத்தின் அருட்கொடையாம் இந்த நபி
அஞ்ஞான இருளை அகற்ற வந்த நபி - எங்கள் சொந்த நபி
அழகிய முன்மாதிரியாய் வாழ்ந்த நபி - மண்ணில் வாழ்ந்த நபி
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

அழைத்திடவே தாயிஃப் சென்ற இறைத்தூதரை
அடித்தார்கள் கல்லால் ஊரின் எல்லை வரை
அழித்திடுவீர் அனுமதியளித்தால் என்றான் இறை - அந்த வானவரை
அனுமதியேன் பொறுப்பேன் ஈமான் கொள்ளும் வரை - என்றார் நபிகள் முத்திரை என்ன அக்கரை
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

அண்ணல் நபி காட்டிய வழியில் நடக்கும் போதிலே
அமைதியான வாழ்க்கை கிடைக்கும் புவியின் மீதிலே
அன்றைய நாள் மஹ்ஷர் வெளியில் தகிக்கும் வெயிலிலே - மக்கள் தவிக்கும் நிலையிலே
அடைக்கலமே தருவான் ரப்பு அர்ஷின் நிழலிலே - அவனின் அர்ஷின் நிழலிலே
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

அஞ்சுகிறோம் மறுமையை எண்ணி யாரஸூலல்லாஹ்
அளவில்லாமல் பாவங்கள் செய்தோம் யாரஸூலல்லாஹ்
அவனுடைய மன்னிப்பு கிடைக்க யாரஸூலல்லாஹ் - நபியே யாரஸூலல்லாஹ்
அனைவர்க்கும் பரிந்துரை செய்வீர் யாஹபீபல்லாஹ் - நபியே யாஹபீபல்லாஹ்
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

முகமெல்லாம் முஹம்மது நபி போல் முகமாகுமா!
அகமெல்லாம் அஹ்மது நபி போல் அகமாகுமா!
மறையெல்லாம் நபிவழி வந்த மறையாகுமா!
உரையெல்லாம் திருநபி சொன்ன உரையாகுமா!
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

💜💜💜💜💜💜💜💜💜💜

பாடல் வரிகள் : *அல்ஹாஜ் முஹிப்புல் உலமா அ.முஹம்மது மஃரூஃப்*

பாடியவர்கள் : *தேரிழந்தூர் தாஜுத்தீன் பைஜீ அவர்கள்*

💜💜💜💜💜💜💜💜💜💜

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?