Mee too

*MeToo* *meToo* *meToo* *நினைவுகள்*

இந்திரனால் கல்லான
அகலிகை சொல்கிறாள்... *meToo*

தருமனால் பணயம் வைக்கப்பட்டு, துச்சாதனனால் சேலை உருவப்பட்ட
பாஞ்சாலி சொல்கிறாள்... *meToo*

பீஷ்மணால் வாழ்விழந்த
அம்பை சொல்கிறாள்...  *meToo*

வியாசகனால் விருப்பமின்றி வயிற்றுப்பிள்ளையை சுமந்த
அம்பிகா_அம்பாலிகா சொல்கிறார்கள்... *meToo*

சூரியனால் கர்ப்பமாகி
கர்ணனை பெற்ற
குந்தி சொல்கிறாள்... *meToo*

ராமனால் நெருப்பில் தள்ளப்பட்ட
சீதை சொல்கிறாள்... *meToo*

லட்சுமணனால் மூக்கறுப்பட்ட
சூர்ப்பனகை சொல்கிறாள்... *meToo*

சிவனால் வன்புணர்வு செய்யப்பட்ட
பார்வதி சொல்கிறாள்... *meToo*

கிருஷ்ணனின் காம விளையாட்டுக்கு பலியான
கோபியர்கள் சொல்கிறார்கள்... *meToo*

முலைவரிக்கு பதில் முலையையே அறுத்து தந்த...
நாஞ்செலி சொல்கிறாள்... *meToo*

2000 ஆண்டுகளாக  உயர் சாதி ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான
தேவதாசிகள்  சொல்லுகிறார்கள்  *meToo*

காஞ்சி மடத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் சொல்லுகிறார்கள் *meToo*

ஒரு அர்ச்சகன் கோவிலுக்குள் வைத்து கற்பழித்தானே அத்தனைப் பெண்களும் சொல்லுகிறார்கள் *meToo*

சங்கராச்சாரி குறித்து அனுராதா ரமணன் சொல்லுகிறார் *meToo*

கோயிலுக்குள் இருந்தே ஆஷிபா கதறுக்கிறாள்... *meToo*

இந்துத்துவா அமைப்புகளால்
வட மாநிலங்களில் அடிச்சு அம்மணமாக ஓடவிட்ட
தலித் பெண்கள் சொல்லுகிறார்கள்  *meToo*

காவல்நிலையத்தில் காவலர்களால் குதறிப் போடப்பட்ட பத்மினி சொல்கிறாள்... *meToo*

காதலனாலும், அவன் நண்பர்களாலும் வன்புணர்வுக்குள்ளாகி மரணித்த நந்தினி சொல்கிறாள்... *meToo*

இந்திய ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, ஜார்க்கண்ட் போன்ற மாநில சகோதரிகள் சொல்கிறார்கள்... *meToo*

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் வனத்துறையும், அதிரடிப்படையும் வன்புணர்ச்சி செய்து கொன்ற பெண்கள் சொல்கிறார்கள்... *meToo*

ஈழத்தில் இந்திய அமைதிப்படை நாசமாக்கிய தமிழீழப் பெண்கள் சொல்கிறார்கள்... *me Too*

அப்பல்லாம் குரல் இல்லாத ஊமைகள், சின்மயி சொல்லிட்டாராம்  *me Too*
- ஊமைகளின் குரல் வானுயரக் கேட்கிறது.

*பகிர்வுதோழர்களே*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?