பெற்றோருக்கு ஃகித்மத்.
*பெற்றோருக்கு ஃகித்மத்.*
-ஃபைஜிஷாஹ் நூரி (ரலி) அவர்கள்
மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்
அல்லாஹ் சொல்கிறான்.
மூசாவே ஒரு மனிதன்
என்னை திருப்தி படுத்தவில்லை, சந்தோஷப்
படுத்தவில்லை, ஆனால் அவனுடைய தாய்
தகப்பனை சந்தோஷப்படுத்தினான் என்றால் நான்
அவன்பேரில் சந்தோஷமாகிவிடுவேன்.
ராஜியாகிவிடுவேன்.
ஒரு மனிதன் என்னை
சந்தோஷப்படுத்தி, அவனுடைய தாய் தகப்பனை
சந்தோஷப்படுத்தவில்லை என்றால் அவனுடைய
விஷயத்தில் நான் ராஜியாக மாட்டேன்.
இப்படி
மூசா அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
சொன்னதாக ஒரு ரிவாயத்தில் வந்துள்ளது.
எதார்த்தமாக வார்த்தையை கேட்டுவிட்டோம்.
ஆனால் அதில் யோசிக்க கடமைப்பட்டுள்ளோம்.
என்ன அர்த்தம்..?
ஒரு மனிதன் என்னை
சந்தோஷப்படுத்துவதற்கு தலை கீழ் நின்று
வணங்கினாலும், என்ன இபாதத் செய்தாலும்
சரி.
நீ தாய் தகப்பனை சந்தோஷப்
படுத்தவில்லையானால் உன் பேரில் நான்
திருப்தியடைய மாட்டேன்.
எனக்கு அமயம்
சமயம் மாறு செய்கிறாய்,
ஆனால் தாய்
தகப்பனை நீ சந்தோஷப்படுத்துகிறாய்,
அந்த
நிலையில் நான் உன்னை பொருந்திக்
கொள்வேன்.
இஸ்லாத்துடைய தூய்மையை
பார்க்கும் போது! ஒரு ரோமத்தை கூட உன்
தாயும் தகப்பனும் உண்டாக்கவில்லை. உன்னை உன்
தாயினுடைய வயிற்றில் தரிப்படுத்தி,
பக்குவப்படுத்தி அங்கு என்ன என்னவெல்லாம்
அல்லாஹ் செய்கிறான்,
அது அந்த தாய்க்கே
தெரியாது.
தாய் உடைய அறிவுக்கு எட்டாமல்
தான் எல்லாம் நடக்கிறது.
புருஷனையும்
சந்தோஷப்படுத்திக் கொள்கிறாள்.
வீட்டில்
உள்ள எல்லா வேலைகளையும்
செய்துகொள்கிறாள்.
ஆனால் தாயினுடைய
வயிற்றின் உள்ளே அல்லாஹுதஆலா
தன்னுடைய குத்ரத்தை கொண்டு மனிதனை
சம்பூரணப்படுத்துகிறான்.
அதனால் இரண்டு
பேரும் உரிமை கொண்டாடவில்லை.
இருந்தபோதிலும் அல்லாஹுதஆலா அந்த
நிஸ்பத்களுக்கு எவ்வளவு உரிமை
கொடுத்துள்ளான்.
சொர்க்கத்தில் எனது நண்பர் யார்? அவர்
ஹயாத்தாக இருந்தால் இங்கேயே எனக்கு
காட்டு என்று மூஸா நபி அல்லாஹ் இடத்தில்
கேட்கிறார்கள்.
முர்சலான நபி அவர்களுடைய
அந்தஸ்துக்கு உரியவர் யாராக இருக்கும்...?
உங்களுடைய சொர்க்கத்து நண்பர் முஹம்மது
நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் என்று
சொல்லவேண்டும்.
ஆனால் அல்லாஹ் அப்போது என்ன சொன்னான்..
இந்த ஊருக்கு போகவும்,
அங்கு கடைவீதி இருக்கும்,
அந்த கடைவீதியில்
கசாப் கடை இருக்கும்,
அங்கு இந்த அங்க
அடையாளம் உள்ள கசாய் ஒருவர் இருப்பார்.
அவர்தான் உங்களுக்கு சொர்க்கத்தில் நண்பர்
என்று அல்லாஹ் சொல்லிவிட்டான்.
முர்சலான
நபி அவருக்கு ஒரு கசாப் கடைக்காரர்
கூட்டாளி என்றால் அவரிடம் என்ன செயல்
இருக்கும்.
மூஸா நபி புறப்பட்டு விட்டார்கள்
தனது சொர்க்கத்தின் கூட்டாளியை
சந்திப்பதற்கு.
அங்கு சென்று அந்த கசாப்காரர்
கடை அடைக்கும் போது,
நான் இன்றிரவு
தங்களுடன் தங்கலாமா என்று கேட்டார்கள்.
அவருக்கு வந்திருப்பது மூஸா நபி என்று
தெரியாமலேயே, வாருங்கள் என் கூட தங்கிக்
கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்தார்;.
இருவரும் நடந்து போய்கொண்டு இருக்கும்
போது, அந்த கசாப்காரர் மூஸா நபியிடம் சரத்
பேசுகிறார். விருந்தாளி உங்களுடன் நான்
அமர்ந்து பேச வேண்டும், உங்களுக்கு விருந்து
எல்லாம் கொடுக்க வேண்டும். ஆனால் நான்
வீட்டுக்கு சென்றவுடன் எனக்கு சில சொந்த
வேலைகள் எல்லாம் இருக்கிறது.
அதுவரையிலும் தாங்கள் தனிமையில் தான்
இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். என்
வேலைகள் முடிந்தவுடன் நான் தாங்களுக்கு
செய்ய வேண்டிய மரியாதைகள் எல்லாம்
செய்வேன் என்று சொல்லிவிட்டார். மூஸா
அலைஹிஸ்ஸலாமும் அவர் சொன்னதை ஏற்றுக்
கொண்டார்கள்.
என்ன வேலை செய்யப்
போகிறார் என்று, மூஸா நபி அமைதியுடன் ஓர்
இடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு
ள்ளார்கள்.
மேலே கயிற்றால்கட்டி ஒன்று
தொங்குகிறது,
அந்த கயிற்றை அவிழ்த்துவிட்டால்
அந்த தொட்டி கீழே இறங்குகிறது.
அதில் கூனி
குருகி புறா மாதிரி அந்த கசாப் உடைய தாயார்
இருந்தார்கள்.
அந்த தாயை சுத்தம் செய்து,
பிறகு தான் கொண்டு வந்திருந்த இறச்சியில்
இருந்து அவர்களுக்கு வேண்டிய சூப் தயார்
செய்து,
அந்த தாயை தூக்கி மடியில் வைத்துக்
கொண்டு,
அந்த தாய்க்கு சூப் கொடுக்கிறார்
அந்த கசாப்.
எல்லாம் முடிந்த உடன் அந்த
தாயை திரும்ப தொட்டியில் தூக்கி
வைத்துவிடுகிறார்.
இவ்வளவையும் மூசா
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பார்த்துக்
கொண்டுள்ளார்கள்.
சூப் குடித்து முடிந்தவுடன்
அந்த தாய் உடைய உதடு ஆடுகிறதாம்.
அப்போது மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
அந்த தாய் என்ன சொல்கிறாள் என்று காது
கொடுத்து கேட்கிறார்கள்.
யாஅல்லாஹ்
இவ்வளவு ஹிதுமத் செய்த எனது மகனை
உனது நபி மூசாவுக்கு கூட்டாளி ஆக்கி விடு’
என்று அவர்கள் துஆ செய்கிறார்களாம்.
உடனே
மூசா நபி,
அந்த கசாப் கடைகாரனை முசாபா
செய்து,
உனது தாய் துஆ செய்தார்களே அந்த
மூசா நபி நான் தான் என்று பஸாரத்
சொன்னார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக