*தமிழகமும் ஒரு ரூபாய் பழக்கமும்
*🕋🕋கன்ஜுல் பாக்கியாத்🕋🕋*
💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿💐
*தமிழகமும் ஒரு ரூபாய் பழக்கமும்*
☘🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘
*தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் ஹதியா, மற்றும் எந்த பணம் வைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் ஒரு ரூபாயை சேர்த்து 501,101,1001,20001 இது போன்று கொடுப்பதைக் காணமுடிகிறது.*
*நம் முன்னோர்களிடமிருந்து வாழையடி வாழையாக தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பரியம் இது.*
*வேறு சிலர் இது காஃபிர்களின் பழக்கவழக்கம். முஸ்லிம்களையும் இந்நோய் தொற்று விட்டது எனக்கூறுகிறார்கள்.*
*உண்மையென்னவெனில் நம் முன்னோர்கள் பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தாலும் அதிலும் ஏகத்துவத்தின் அகமியங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.*
*இதோ எம்பிரான் நபி(ஸல்) அவர்களின் நபிமொழியை காணுங்கள்:*
*''إن الله وتر يحب الوتر فأوتروا يا أمة القرآن "*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* *அல்லாஹ் ஒருவன்தான். ஒற்றைப்படையைதான் அவன் விரும்புகிறான். ஆகவே குர்ஆன் கொடுக்கப்பட்ட சமூகமே நீங்கள் ஒற்றைப்படையை விரும்புங்கள்.*
*இந்த ஹதீஸின் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் பணம் கொடுப்பதாக இருந்தால் அதில் ஒரு ரூபாய் , 5 ரூபாய் போன்றவைகளை மற்ற ரூபாய்களோடு சேர்த்து கொடுத்துள்ளார்கள்.*
*ஆகவே ஏகத்துவ நாயன் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவத்தில் நம் எல்லா விஷயங்களையும் அமைத்துக்கொள்வோமாக!*
🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿
கருத்துகள்
கருத்துரையிடுக