ஹீன்-குர்ஆனை நேரடியாக நம்மால் விளங்கமுடியாது

வரலாற்றில்_ஒரு_ஏடு

கண்மணி_நபிகளார்_ஸல்லல்லாஹூ_வஸல்லம் அவர்கள் காலத்தில்,,,

ஒரு கிராமவாசி தன்னுடைய மனைவியை கோபத்தில் "தல்லக்து இலா ஹீன்" என்று கூறிவிட்டார் .

அதாவது ஒரு "ஹீன்" வரை உன்னை விவாகரத்து செய்கிறேன் என்று கூறிவிட்டார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆனால் அல்லாஹ்வினால் மிகவும் வெறுப்பிற்குரிய ,

இறைவனின் அரியாசனம் நடுங்கக்கூடிய ஒரு சொல் இருக்கிறது என்றால் அது தலாக் - விவாகரத்துதான் .

அவசரப்பட்டு கோபப்பட்டு கூறிவிட்டோமே என்று அவர் வருந்தி இதற்க்கு ஏதேனும் தீர்வு இருக்குமா என்று தேடினார் .

காரணம் அந்த கிராமவாசி கூறிய வார்த்தை
"தல்லக்து இலா ஹீன் -ஒரு ஹீன் வரை தலாக்" .
ஹீன் வரை என்றால் ஹீன் என்பது காலத்தை குறிக்கும் ஒரு சொல் .

ஹீன் என்பது எவ்வளவு காலங்களை குறிக்கும் என்று அவருக்கு சந்தேகம் ...

ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று விசயத்தை கூறினார் .

சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் -
"ஹீன யரவ்னல் அதாப" - வேதனை செய்யப்படும் அந்நாளில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
அதனால் ஹீன என்றால் அது கியாமத் மறுமையை குறிக்கும் .

அதாவது கியாமத் வரை தலாக் என்று கூறினார்கள் .
வேறு வழியே இல்லையா என்று ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்...!!

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
"வமதாஉன் இலா ஹீன்" - இவ்வுலகில் வாழும் காலங்களில் நீங்கள் இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்...!!

அதனால் ஹீன் என்றால் இவ்வுலகில் வாழும் காலம் வரை என்று பொருள் என்று கூறினார்கள்.

வந்தவர் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கியாமத் வரை இருந்தால் என்ன ? இவ்வுலக வாழ்க்கை முடியும் வரை இருந்தால் என்ன இரண்டும் ஒன்றுதானே என சிந்திக்கிறார்...!!!

அடுத்து உஸ்மானே கனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் செல்கிறார்,
அவர்கள் கூறுகிறார்கள்..!!

"துஹ்தி உகலஹா குல்ல ஹீனிம் பிஇத்னி ரப்பஹா".
உங்கள் விளைநிலங்களிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுக்கு அதன் பலன்களை அல்லாஹ் கொடுக்கிறான்..!!

அதனால் ஹீன் என்றால் ஆறு மாதம் என்று கூறினார்கள்...!!

வந்தவருக்கு சந்தோசம் ஒரு வழியாக ஆறு மாதத்திற்கு வந்து விட்டோம்...!!

இன்னும் ஏதேனும் சலுகை கிடைக்குமா என்று ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்க்கிறார்கள்...!!

ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்,,,

"fவசுப்ஹானல்லாஹி ஹீன தும்சூன வஹீன துஸ்பிஹூன்". நல்லடியார்கள் காலையிலும் மாலையிலும் இறைவனை துதிதுக் கொண்டே இருப்பார்கள்..!!

ஆக ஹீன என்றால் காலை அல்லது மாலை வரை என்று பொருள்,,,

அதாவது,,,

காலையில் தலாக் சொன்னால் மாலையில் முடிந்துவிடும் மாலையில் தலாக் சொன்னால் காலையில் முடிந்துவிடும் என்று கூறினார்கள்...!!

வந்தவருக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் நான்கு பேருமே சுவனத்தை கொண்டு சுபச்செய்தி சொல்லப்பட்ட நல்லடியார்கள்..!!

ஒருவர் ஹீன் என்றால் கியாமத் என்கிறார்கள் மற்றொருவர் இவ்வுலக வாழ்க்கை முடியும் வரை என்கிறார்கள்.

மற்றொருவர் ஆறு மாத காலம் என்கிறார்கள் மற்றொருவரோ காலையிலிருந்து மாலை வரை அல்லது மாலையிலிருந்து காலை வரை என்கிறார்கள் நான்கு பேருமே குர்ஆன் வசனத்தை கூறுகிறார்கள்.!

இதில் யாருடைய பேச்சை கேட்பது என்ற சந்தேகத்துடன் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் சென்றார்கள்.!

கண்மணி நாயகம் ஈருலக லட்சகர் ரவூfபுன் ரஹீமாக இருக்கக்கூடிய அண்ணலம்பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அப்போதுதான் கூறினார்கள்...!!

"அஸ்ஹாபி கன்னுஜூம் fபபி அய்யுஹும் இக்ததைதும் இஹ்ததைதும்"

என்னுடைய_தோழர்கள்_நட்சத்திரத்தை_போன்றவர்கள்_இதில்_யாரை_நீங்கள்_பின்பற்றினாலும்_நேர்வழி_பெறுவீர்கள் என்று கூறி,,,

வந்தவரின் மனநிலையை உணர்ந்து நீங்கள் ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சொல்லை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்...!!

அல்ஹம்துலில்லாஹ்
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?