அற்புதக் கேள்விகள்
*ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைசர் மன்னர் அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி அதில் கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார்.*
*🎤1). கிப்லா இல்லாத பகுதி அது?*
*🎤2). தந்தை இல்லாதவர் யார்?*
*🎤3). ஒருவரை அவருடைய கபூர் கொண்டு நடந்தது அவர் யார்?*
*🎤4). கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை?*
*🎤5). மூன்று பொருள்: ஒன்று முழுமையானது மற்றொன்று அரைகுறையானது. இன்னொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து .இவை யாவை?*
*🎤7). உலகிலுள்ள எல்லா பொருளின் மூலத்தையும் ஒரு போத்தலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.*
*இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அனுப்பினார்கள்.*
*எம்பிரான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விசேஷ ஞானத்தையும் மார்க்கத்தின் சட்டத்தையும் யா அல்லாஹ் இவருக்கு கற்றுக் கொடு என விசேஷமாக கைது செய்யப்பட்டவர்களும் திருக் குர்ஆன் விரிவுரையாளர்கள் தலைவர் என பிரபலமாக அறியப்பட்ட பேரறிஞர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு:-*
*🌺1). கிப்லா இல்லாத பகுதி புனிதம் வாய்ந்த கஅபாவாகும்.*
*🌺2). தந்தை இல்லாதவர் ரூஹுல்லாஹ் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.*
*🌺3). குடும்பப் பாரம்பரியம் இல்லாதவர் பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.*
*🌺4). கவர் கொண்டு நடந்தது யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.*
*🌺5). கருவறையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன:-*
*🎗1). நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பகரமாக கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.*
*🎗2). கரும்பாறையில் இருந்து வெளிவந்த நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதி அற்புத ஒட்டகம்.*
*🎗3). மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாம்பாக மாறிய கைத்தடி*.
*🌺6). சுய புத்தி உள்ளவர் முழுமையானவர். சொல்புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர். சொல் புத்தியில்லை சுயபுத்தியும் இல்லை இவர்தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.*
*🌺7). பின்னர் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாட்டிலில் நிரப்பி இதுதான் எல்லா பொருளில் பொருள்களின் மூலப்பொருள் என பதிலளித்தார்கள்.*
*''ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் وجعلنا من الماء كل شيء حي நீரிலிருந்துதான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம் '' எனக் கூறுகிறான்.*
கருத்துகள்
கருத்துரையிடுக