அரபி மதரஸாக்களில் கற்றுத்தரப்படும் பாடப்பிரிவுகள்
*அரபி மதரஸாக்களா? அறிவியல் கல்லூரிகளா?*
நம் அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் பாட திட்டங்களின் சுருக்கமான ஓர் அட்டவணையை உங்களுக்கு சொல்றேன் .
1 ) தஃப்ஸீர் - குர் ஆன் விளக்கவுரை - (Commentary .)
2) ஹதீஸ் - நபிமொழி - (Tradition)
3) பிக்ஹ் ஃபராயிள் - சட்டத்துறை _(Mon Law and Jurisprudence ) பாகப்பிரிவினை .
4 ) உஸூலுல் ஹதீஸ் _ நபி மொழி ஆதாரங்கள் - ( principles of Hadith ) -
5) உஸுலுல் ஃ பிக்ஹ் - சட்டத்துறை ஆதாரங்கள் கோர்ப்பு (principles of mon Law and Jurisprudence.)
6) தஸவ்வுஃப் - ஆத்ம ஞானக்கலை (Biography )
7) தாரீக் - சாத்திரம் (Rhetoric )
8) சீரத் - இதிகாசம் -(History)
9) மஆனீ - அணியிலக்கணம் .(mythology )
10 ) மன்தீக் - ( Logic ) பேச்சுக்கலை (oratory)
II ) முனாளரா - தர்க்க சாஸ்திரம் - (logic)
12) அகாயித் - மத நம்பிக்கைகள் (Diseussion)
கொள்கை (Dogma)
13) ஹிக்மத் - தத்துவக் கலை (Geometry Astronomy )
14) அதப் - இலக்கியம் (prosody )
15) ஹன்தஸா - வரைபடக் கணிதம்
16) ஹை அத் - வான சாஸ்திரம் (syntax )
17) அருழ் . சர்ப் , நஹ்வு - யாப்பிலக்கணம் , சொல்லிணக்கணம் (Etymology ). சொற்புணரிலக்கணம்
20) ஹிஸாப் -கணிதம் (mathematics )
21) இன்ஷஃ _ அரபி மொழி தேர்ச்சி (composition and Essay writing )
22) கிராஅத் - திருமறை திருத்தமாக ஓதுதல்
( Recitation)
23) தொண்ம இயல் (mythology )
இது போன்ற இன்னும் பல கலைகளும் அரபி மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு பல்கலைக்கழகமாகவே விளங்குகிறது .
இது போக குர்ஆன் வசனத்திற்கு உட்பொருளை அறிந்திட இன்னும் ஒரு 15 கலைகள் இருக்கிறது அதை அடுத்தப் பதிவில் சொல்றேன் .
இப்பேற்பட்ட மதரஸாக்களில் விரல் விட்டு எண்ணும்படியான மாணவர்களின் சேர்க்கை குறைவு தமிழகம் முதல் எல்லா மாநிலங்களிலும் இந்த தேக்கம் காணப்படு கிறது . இது எதிர்கால சமுதாய பயத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது .
சமுதாயமே , சற்று சிந்திப்பீர்களா ?
*- ரஹ்மத் ராஜகுமாரன்.*
*பி.கு:* மன்திக், மஆனீ, ஹிஸாப், தஸவ்வுஃப், உஸூல் கிதாபுகள், முனாளரா, ஹிக்மத், அரூள் - காஃபிய்யா வகைகள் போன்றவற்றின் அவசியம் ரஹ்மத் ராஜகுமாரன் எனும் எழுத்தாளருக்குப் புரிகிறது.
இவை தேவையில்லாத கலைகளாக சிலர் புறக்கணிக்கின்றனர். பல மதரஸாக்கள் *'ஜாமிஆ - பல்கலைக் கழகங்கள்'* எனும் பெயர்களை வைத்துவிட்டார்கள் என்பதற்காக தொடர்கின்றன. அவை பொருள் இழந்து தான் ஜாமிஆக்களாக இருப்பதாக ஒரு மூத்த ஆலிம் பெருந்தகை கூறினார்கள்.
நான் கேள்விப்பட்ட வகையில் தேவ்பந்தினுடைய ஷைகுல் ஹதீஸ் ஸஈத் அஹ்மது பாலன்பூரி அவர்கள், "இந்த ஃபல்ஸஃபா கலை, நம்மிடம் கூட அவ்வளவாக பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஜனூபின் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் முதவ்வல் வரை அக்கலைகளோடு குர்ஆன், ஹதீஸை அணுக பயிற்றுவிக்கிறார்கள்" என்று சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
காலத்தின் முக்கியத்துவம் கருதி இவைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இப்பாடங்கள் எடுக்கப்பட்ட மதரஸாக்களுக்கு உருவாகி இருக்கின்றன. இவைகளை இழக்க இழக்க, குர்ஆன், ஹதீஸை அணுகும் முறைகளில் தொய்வு ஏற்படுவதை கண்கூடாக காண முடிகிறது.
*வருத்தத்துடன்,*
*அ. நௌஷாத் அலி பாகவீ*
கருத்துகள்
கருத்துரையிடுக