பெருநாள் வாழ்த்து

*"ஈதுள் அல்ஹா" எனும் பெருநாள் வாழ்த்துக்கள்...*

நெஞ்சுக்குள் இருக்கும்
வஞ்சமெல்லாம் மறந்து
கட்டித் தழுவிச் சொல்வோம்
*ஈத் முபாரக்* -

பெருநாள் காசில் - எதை வாங்கலாம் என குதூகலிக்கும்
குழந்தை முகங்களுக்கு சொல்வோம் ...
*ஈத் முபாரக்*

தக்பீரின் ஓசையோடும்
மகிழ்ந்த மனசுகளோடும்
மஸ்ஜிதில்
நிறைந்திருக்கும்
நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம் ..
*ஈத் முபாரக்..*

உறவுகளின் வீடு தேடி -
நண்பர்களின் நட்பு நாடி...
நடந்து சென்று ..
அவர்களிடம்
நல்ல உள்ளத்தோடு நன்றாய் சொல்வோம் ..
*ஈத் முபாரக்..*

கல்விக்கண் திறக்க
பாங்காய் கற்பித்து
படிப்பைத்தந்த ஆசிரியர்களுக்கு சொல்வோம்
*ஈத் முபாரக்!*

வாழ்விலும்,தாழ்விலும்
ஒன்றுபோல் தோள் தந்து
உதவிட்ட தோழர்களுக்கு
சொல்வோம்
*ஈத் முபாரக்!*

பொழுதை போக்குவதற்கு
கணினி முன்னமர்ந்து
கிறுக்கியதை அருமையென
சிலாகித்து உவந்து
தவறாது தட்டிக்கொடுத்து
ஓட்டளித்து பின்னூட்டும்
வலையுலக நட்புக்களே
உங்கள் அனைவருக்கும்
சொல்கிறேன்
என் நெஞ்சார்ந்த
*ஈத் முபாரக்!*

தெருவுக்குள் இருக்கும்
அடுத்த இனத்தர் இல்லம் தேடி
பலகார பார்சலோடு செல்கையில்
அவர்கள் முகத்திலும்
எம் பெருநாளின் சந்தோசம் தெரிய
வாடாத வாழ்த்தை
பெற்று வருவோம்..

பெருநாளின் சந்தோசம்
அனைவருக்கும்
உண்டாக ..
கூறுகிறேன்
*ஈத் முபாரக்...*

*செய்யது அஹமது அலி . பாகவி*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?