வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு வேகமாக வந்த நான்கு சந்தர்ப்பங்கள் வருமாறு:–
வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு வேகமாக வந்த நான்கு சந்தர்ப்பங்கள் வருமாறு:–
ஒரு நாள் பொழுதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள், ‘‘நீங்கள் எப்போதாவது முழு வேகத்தோடு பயணித்து இருக்கிறீர்களா?". ஜிப்ரீல் (அலை) கூறினார்கள், ‘‘ஆம், நான்கு சந்தர்ப்பங்களில் நான் அதிவேகமாக பயணித்து இருக்கிறேன்.’’
நபிகள் நாயகம் கேட்டார்கள், ‘‘அந்த நான்கு சந்தர்ப்பங்களும் எவை?’’.
* ஜிப்ரீல் (அலை) கூறினார்கள், "முதலாவது முறை, ஹஜ்ரத் இபுராஹிம் நபி (அலை) அவர்கள் நம்ரூதுடைய நெருப்பிலே வைக்கப்பட்ட போது வந்தேன். அப்போது நான் அல்லாஹ்வின் அரிய அர்ஷின் (சிம்மாசனம்) அருகிலே இருந்தேன். அல்லாஹ் எனக்கு அந்த தீயை குளிர வைக்கும்படி உத்தரவிட்டான். உடனடியாக நான் அர்ஷை விட்டும் நீங்கி ஏழு வானங்களையும் கடந்து, இபுராஹிம் நபி (அலை) இருந்த பூமிக்கு வந்து சேர்ந்தேன்.
* இரண்டாவது முறை, மினாவில் வைத்து இபுராஹிம் நபி (அலை) அவர்களது அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை குர்பானி (தியாகம்) கொடுக்க போகப்போகும் தருணத்தில் வந்தேன். செய்யிதுனா இபுராஹிம் (அலை) தன்னுடைய கத்தியால் அவர்களது மகனை அறுப்பதற்கு முன் வந்த சமயத்தில், அதற்குப் பகரமாக ஒரு செம்மறி ஆட்டை கொடுக்குமாறு அல்லாஹ் எனக்கு உத்தரவிட்டான். அந்த செய்தியை இபுராஹிம் நபிக்கு தெரிவிப்பதற்காக வேகமாக வந்தேன்.
* மூன்றாவது முறை, நபி யூஸுப் (அலை) அவர்களை, அவர்களது சகோதரர்கள் பாழுங்கிணற்றினுள் வீசி எறிந்த போது வந்தேன். அப்போது வேகமாக வந்த நான் யூஸுப் நபி அந்த (ஆழமான) கிணற்றின் அடியை அடைவதற்கு முன்பு என் சிறகுகளை அவர்களுக்கு கீழாக வைத்தேன்.
* கடைசியாக, யா ரஸூலல்லாஹ் உஹது யுத்தத்தின்போது உங்கள் முபாரக்கான பல் உடைப்பட்டு காயமுற்ற போது உங்களுக்காக வந்தேன். தங்களது புனிதக் குருதி பூமியைத் தொடுமுன்னர் அதைப் பிடியுங்கள் என்று அல்லாஹூ ஜல்ல ஜலாலுஹூ எனக்கு கட்டளையிட்டான். அப்படி தங்கள் குருதி அந்த பூமியை அது தொடுமேயானால், இந்தப் பூவுலகம் அழியும்வரை அங்கு எத்தகைய புல், பூண்டு, தாவரமும் முளைக்காது என்று கூறினான். இதைக் கேட்டவுடன், வேகமாக வந்தேன். என் சிறகுகளால் உங்கள் குருதியைத் தாங்கிக் கொண்டேன்.
-(நூல்: ரூஹுல் பயான்)
நன்றி: மெயில் ஆப் இஸ்லாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக