நான்கு நான்காக நல்லவைகள்
REAL WAY OF LIFE:
இப்னு கைய்யும் அவர்கள் கூறுகிறார்கள்:
நான்கு விஷயங்கள் வியாதியை உண்டாக்கும்:
1.அதிகமான பேச்சு
2.அதிகமான தூக்கம்
3.அதிக உணவு
4.அதிக உடலுறவு
நான்கு உணர்வுகளால் உடல் கெட்டுப் போய்விடும்:
1.சோகம்
2.கவலை
3.பசித்திருப்பது
4.விழித்திருப்பது
நான்கு காரியங்கள் முகத்தில் பிரகாசத்தை உண்டாக்கும்:
1.இறையச்சம்
2.வாக்குறுதியை நிறைவேற்றல்
3.கொடைத்தன்மை
4.மனிதநேயம்
நான்கு காரியங்களால் முகத்தின் பிரகாசம் நீங்கி முகம் இருட்டாகி விடும்:
1.பொய்
2.வெறுப்புணர்வு
3.தனக்கு தேவையில்லாத விஷயத்தை பற்றி அதிகமாக கேள்வி கேட்பது
4.அதிகமான பாவங்கள்
நானகு விஷயங்கள் மனிதனுக்கு ரிஜ்கை தடைசெய்யும்:
1.சோம்பேறித்தனம்
2.மோசடி செய்தல்
3.தொழுகையில் கவனமின்மை
4.சுப்ஹு நேர தூக்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக