வெறுப்பும் பொருத்தமும்
மதீனா முனவ்வராவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார், ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள், தமக்கு உபதேசம் எழுதி அனுப்பும் படியும், அது சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதாகவும், ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஸலாம் எழுதியதற்குப் பிறகு, ஒருவர் மக்களுடைய வெறப்பையும் பொருட்படுத்தாமல் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தால், மக்களுடைய வெறுப்பின் தீங்கைவிட்டுப் பாதுகாக்க அல்லாஹுதஆலா அவருக்குப் போதுமானவனாக ஆகிவிடுவான். மேலும், ஒருவன் அல்லாஹுதஆலாவின் வெறுப்பை பொருட்படுத்தாமல் மக்களைத் திருப்திபடுத்துவதில் ஈடுபட்டிருந்தால், அல்லாஹுதஆலா அவனை மக்களிடமே ஒப்படைத்து விடுவான்'' என நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். தங்களின் மீது சலாம் உண்டாகட்டும் என்று ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்களுக்கு பதில் எழுதி அனுப்பினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக