இறையச்சத்தின் இரகசியம்

ஒருவர் ஹஸன் அல் பஸ்ரி(ரஹ்)யிடம் கேட்டார்கள் :

"உங்களுடைய இறையச்சத்தின் இரகசியம் என்ன ?"

அவர்கள் கூறினார்கள்:-

" நான் 4 விஷயங்களை புரிந்துக்கொண்டேன் :

1) என்னுடைய ரிஜ்கை (வாழ்வாதாரம்) வேறு எவராலும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை புரிந்துக்கெண்டேன், அதனால் என் மனம் திருப்தியடைந்தது.

2) என்னுடைய செயல்களை (வழிபாடு) வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் அதை நானே செய்ய தொடங்கிவிட்டேன்.

3)அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் ஏதேனும் தவறு செய்ய வெட்கப்பட்டேன்

4) மரணம் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் அல்லாஹ் வுடனான என்னுடைய சந்திப்பிற்காக என்னை தயார்படுத்தி கொள்ள தொடங்கிவிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?