இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செல்போன்

1. இது கடிகாரத்தை சாப்பிட்டது 2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது 3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது 4. இது புத்தகங்களை முழுங்கியது 5. இது வானொலியை விழுங்கியது 6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது 7. இது கேமராவை அழித்தது 8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது 9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது 10. இது உறவையும் மறக்கடித்தது 11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது 12.  விளையாட்டு இல்லை, பாடல் இல்லை... இதுவே வங்கி, இதுவே ஹோட்டல், இதுவே மளிகைக் கடை... இதுதான் மருத்துவர், இதுதான் உண்மையான சந்தை... வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்... எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்... ஒரு விரல் உலகை ஆளுகிறது... அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது.... வாய் முடக்கப்பட்டுள்ளது... உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை... ஆனால் யாரும் தொடர்பில்லை... ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக..... பல குடும்பங்கள் கெட்டுப் போனதும் இதனால தான்..... Udhayendiran Annachi

விவசாயி

*இரண்டு கோடிகள்* *கொடுத்து* *ஒரு ஜோடி நாய்கள்*  *வாங்கும்* *எங்கள் தேசத்தில்...!!* *இருபது கோடிகள்* *கொடுத்து* *ஒருவர் மட்டுமே* *பயணிக்க* *கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!* *இருநூறு கோடிகள் கொடுத்து* *கிரிக்கெட் அணியை* *ஏலமெடுக்கும்* *எங்கள் தேசத்தில்..!* *இரண்டாயிரம் கோடிகளை கடன்களை* *தள்ளுபடி செய்யும்* *எங்கள் தேசத்தில்...!!* *இருபதாயிரம் கோடிகளை* *பொழுதுபோக்க* *ஒதுக்கும்* *எங்கள் தேசத்தில்...!!* *இரண்டு இலட்சம்* *கோடிகளுக்கு* *அலைக்கற்றை* *ஏலமெடுக்கும்* *எங்கள் தேசத்தில்...!!* *எங்களையோ அல்லது நாங்கள்* *விளைவிக்கும்* *பொருளையோ* * *ஏலமெடுக்கத்* *தான்* *எவருமில்லை....!!* *விளைவித்தவன்* *பிச்சைக்காரன்...!!* *விலை வைத்தவன்* *இலட்சக்காரன்...!!* *படித்ததில் வலித்தது.* *படித்தேன்!* *பகிர்ந்தேன்!* *இவர்களை காக்கவில்லை எனில் பின்னாளில் உலகம் அழிந்துபோகும் பசியால்..*😢😢

இலந்தைமரம்

இலந்தை மரத்தை இலேசாக எண்ணவேண்டாம்!      கீரனூர் மவ்லவீ S.N.R.ஷவ்கத் அலி மஸ்லஹி      வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்டது இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது. அல்முகைரா இப்னு சயீத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; “ஒருமுறை நான் அப்துல்லாஹ் இப்னு அபூஷதீதா (ரளி) அவர்களின் தோட்டத்திற்கு போனபோது அங்கு இலந்தை மரம் அதிக அளவில் வளர்ந்திருப்பதைக் கண்டு “அவைகளை வெட்டி எறியலாமே..!” என்றேன். உடனே அவர் “மஆதல்லாஹ், அல்லாஹ் பாதுகாப்பானாக!” என்று கூறிவிட்டு நபிகளாரின் பொன்மொழியொன்றை ஞாபகப்படுத்தினார். “எவர் விவசாயத் தேவையின்றி இலந்தை மரத்தை வெட்டியெறிகிறாரோ அவருக்கு நரகத்தில் தங்குமிடம் செய்யப்படும்.” (நூல்: அபூ நுஅயம்) மரங்கள் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டியவை. அதே வேளை விவசாயத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக மரத்தை வெட்டலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மரத்தை வெட்டவே கூடாது என்பதல்ல விதி. வெட்டவேண்டிய நேரத்தில் வெட்ட வேண்டிய மரங்க...

#தரித்திரம் #வறுமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நமக்கு நாமே தரித்திரங்களைத் தேடிக் கொள்ளும் 33 விஷயங்கள்!! அவசியம் படித்து விட்டு வேறு வேலை பாருங்கள்! இல்லையேல் தரித்திரம் வீட்டிலேயே குடிகொண்டிருக்கும்! அல்லாஹ்வின் கூற்று இதோ..   وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ‏ உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவைதான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றான். (அல்குர்ஆன் : 42:30) நபி ஸல் அவர்களின் கூற்று இதோ.... 1,பிஸ்மில்லாஹ்... சொல்லாமல் சாப்பிடுதல்! 2,விருந்தாளியை கேவலமாக பார்ப்பது! 3, செருப்பு போட்டிருக்க சாப்பிடுதல்! 4, திறந்த தலையுடன் சாப்பிடுதல்! 5,பள்ளிவாசல்களில் உலக பேச்சுக்கள் பேசுவது! 6,மூத்தவர்களை முந்திச் செல்வது! 7, அன்னியப் பெண்களைப் பார்ப்பது! 8,பொய் பேசுவது! 9,ஏழைகளை விரட்டுவது! 10,மஃரிபிற்குப் பின் தூங்குவது! 11,கழிவறைக்கு திறந்த தலையுடன் செல்வது! 12, கழிவறைக்குள் உமிழ்வது! 13,குளியலறைகுள் சிறுநீர் கழிப்பது! 14,பாடல்களில் உள்ளம் இலயிப்பது! 15,குர்ஆனை ஒலுவின்றி தொடுவ...

நர்சிங்

அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும் https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e    பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும். நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்: • +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy) • ஆதார் அட்டை ((Original + Xerox copy) • Transfer Certificate – TC (Original + Xerox copy). இந்த செய்தி தங்களுக்கு பயனில்லை என்றாலும் வேறு குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும். தேவைப்படுவோருக்கு உங்கள் மூலம் பயன் கிடைக்கட்டும்.

கடன்

அழகிய கடன்  அதென்ன "அழகிய கடன்" உறவுகளுக்குள் நண்பர்களுக்குள் வழங்கிக் கொள்ளும் கடன் "அழகிய கடனாகும்" பலரும் கடன் ஆபத்தானது.  அது அன்பை முறிக்கும்.  உறவுகளை முறிக்கும் என்றெல்லாம் கருத்துகளை வைத்திருக்கலாம்.  என்னைப் பொருத்தவரை  அழகிய கடன் என்பது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மற்றொரு முக்கியமான விசயமாகும்.  அழகிய கடனில் வட்டி இருப்பதில்லை.  எனினும் சக உயிர் மீது கொண்ட அன்பும் பாசமும் பரிவும் நிறைந்து இருக்கிறது. இருவர் செய்து கொண்ட அன்பின் உச்சநிலை என்பது தியாகமாகும் நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு  நமக்கு எதை விரும்புவோமோ அதையே விரும்புவதும் நாம் கொண்ட செல்வத்தை அவர் முன்னேற சில காலம் தியாகம் செய்வதும் அன்பின் வெளிப்பாடே ஆகும்.  தற்கால வாழ்க்கையில்  திடீரென நிகழும் தொழில் சுணக்கம் திடீரென வரும் மருத்துவ செலவுகள் இது போன்ற முன்பின் எதிர்பாராத நிகழ்வுகளில் உறவுகள் நண்பர்கள் பக்கபலமாக நின்று அழகிய கடன்களை பெற்றும் வழங்கியும் வருவதாலேயே வாழ்க்கை மீது பிடிமானம் ஏற்படுகிறது.  நமது வாழ்க்கையில்  நாம் நேரடியாகவோ அல்லது நமக்காக நமது பெற்றோ...