இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#tntj #வஹ்ஹாபி #இயக்கங்கள் #

#தமிழ்நாடு அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் ஜமாஅத்துல் உலமா சபை 5 ஆண்டுகளுக்கு முன்பே திரு #PJ மற்றும் அவர் கொள்கையைப் பின்பற்றும் #TNTJ, NTF, YMJ, CTJ, SLTJ இன்னும் பல முட்டுச் சந்து TJக்களை காஃபிர் என்றும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள், முர்தத்கள் என்று மார்க்கத்தீர்ப்பு வழங்கி பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த ஃபத்வா வில் கையெழுத்திட்ட 8 பேர்களில் 3 பேர்கள் தற்போதைய மாநில ஜமாஅத்துல்உலமா சபையின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும், துணைச் செயலாளராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.  இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுதியும், பேசியும், பிரச்சாரங்கள் செய்தும் முஸ்லிம் சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிறது TNTJ என்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் ஒரு வஹாபி இயக்கம். அந்த அமைப்பின் ஸ்தாபகர் PJ எனும் பி.ஜெயனுலாப்தீன். . இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக பேசி வருகின்றனர். . மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், சஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் போன்ற இஸ்லாமிய பெரியார்களை கேவலமாக பேசியும் எழுதியும் வருகின்றார்கள். . இவர்களின் ...

#ஜமாபந்தி

*ஜமாபந்தி பற்றி உங்களுக்கு பயன்படக்கூடிய 15 தகவல்கள்* 1.ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால்கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை(AUDIT) முறையாகும். 2.இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. 3.இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிருவாக அலுவலர்ஆகியோர் கலந்து கொள்வார்கள். 4.இதில் விவசாய நில பட்டா மாறுதல் கோரி, நத்தம் பட்டா மாறுதல் கோரி, வீட்டு மனை பட்டா மாறுதல் கோரி, நில அளவை செய்யக்கோரி, நிலஉட்பிரிவு கோரி மனு செய்யலாம் 5.பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பத்துடன் கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் இணைத்து வழங்கினால் அனைத்து ஆவணங்களும் கிராம கணக்கும் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. 6.வீட்டுமனை இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை கேட்டும் விவசாய நிலம் இல்லாத ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இலவச நிலம் கேட்டு விண்ணப்பிக்கலாம் 7.ஜமாபந்தியில் எல்லா அதிகாரிகளையும் ஒரே நாட்களில் சந்திக்கலாம்.சாதாரண அலுவல் நாட்களில் இவ...

காயிதேமில்லத்

படம்
காயிதே மில்லத் - இந்த பெயரை ஸ்கூலில் படிச்சதோடு சரி.. ஆனால் இவரை பற்றி இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. எனவே பிள்ளைகளுக்காகவே சுருக்கி இவரை பற்றி பதிவிடுகிறேன்..! காயிதே மில்லத், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் இதயவேந்தன்..! "கண்ணியம்" என்றாலே அது சாட்சாத் காயிதே மில்லத் தான் என்பார் பேரறிஞர் அண்ணா..! இவர் சாதாரணமாக பேசினால்கூட குரான் வசனத்தை மேற்கோள் காட்டிதான் பேசுவார்..! இன்னைக்கு நெய்வேலியில் இருந்து நமக்கு கரண்ட் கிடைத்து வருகிறது என்றால் அதற்கு இந்த புண்ணியவான், சட்டமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்தான் காரணம்!  இஸ்லாமிய பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காகவே ஏராளமான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியவர்..!   வருஷந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறும் சென்னை "புதுக்கல்லூரி"யை உருவாக்கியவர்..!  எளிமையானவர் - தனக்கு வியாபாரத்தில் கிடைத்த பணத்தைகூட, ஏழைகளுக்காகவே அர்ப்பணித்தவர்..! மேல்சபை, சட்டசபை, லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவிகளையும் வகித்தவர்..! தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் முதன்முதலில் வா...