இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

#புத்தகம்

#புத்தகங்களைப் #பாதுகாப்பதுஎப்படி?❤📖📖📖📖📖📖📖📖 1.வெப்பம் தூசி இரண்டுமே புத்தகங்களின் ஆயுளைக் குறைப்பவை 2. வழக்கமாக புத்தகங்களின் அடியில் பழையசெய்தித்தாளைப் போட்டு அடுக்குவதே பெரும்பான்மையோர் வழக்கமாக உள்ளது. அது புத்தங்களைச் சீக்கிரம் மடிக்கச் செய்துவிடும். பழுப்பு நிறமேறி சீக்கிரம் பழைய புத்தகம் போல் ஆகிவிடும். 3. அதிகமான புத்தகங்களை வைத்திருப்போர் ஆண்டுக்கு இரண்டுமுறையாவது அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து தூசிதட்டிப் பக்கங்களிடையே காற்றுபடும்படி புரட்டிவிட்டு அடுக்குவது அவசியம். 4. 60°C வெப்பத்தில் ஒருநாள் இருந்தால் அந்தப் புத்தகம் தன் ஆயுளில் ஒரு ஆண்டிற்குரிய சேதத்தை அடையும். 5. புத்தகங்களின் அடுத்த எதிரி ஈரமும் ஈரப்பதமும். இவற்றிடமிருந்து பாதுகாப்பதும் அவசியமாகும் 6. புத்தக அலமாரி தட்டுகளின் நீளஅகலத்திற்கு ஏற்ப வெள்ளைநிறப் பருத்தித் துணியினை விரிக்கலாம். புத்தகங்களின் மேற்புறமும் துணியால் மூடுவதால் தூசி படாமல் தவிர்க்கலாம்.  7.ஸ்பானிஷ் டிஷயூ பேப்பரால் உறை செய்து நீண்டநாள் பாதுகாக்க எண்ணும் புத்தகங்களுக்குப் போடுவது  பயன்தரக்கூடியது. 8. பாண்டிச்சேரி அரபிந்தாசிரமத்...

#Usman street #Chennai #உஸ்மான்தெரு

படம்
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ......... -------------------------------------------------- "முதல் தலைமுறை மனிதர்கள்". வரலாற்றாசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் புத்தக வெளியீடு - 25.12.2016. சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.  ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். உஸ்மான் - ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான், Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960. பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார். 1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். ...

#பெண் #பெண்குழந்தை #girl child

பெண்பிள்ளைகளைப் போற்றுவோம் -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி -----------------------------  அறியாமைக் காலத்தில் பெற்றெடுத்த பிள்ளைகளைத் தம் வறுமை காரணமாக மக்கள் கொன்றார்கள். குறிப்பாகப் பெண்பிள்ளைகளை உயிரோடு புதைத்தார்கள். அவர்கள் பிறப்பதையே வெறுத்தார்கள். ஊரில் யாரேனும் உனக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது என்று கேட்டால், ‘பெண் பிள்ளை’ என்று சொல்ல வெட்கப்பட்டார்கள்; வெறுத்தார்கள். அத்தகைய காலக்கட்டத்தில், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதால் ஒருவர் சொர்க்கம் செல்லலாம் என்ற நற்செய்தியைக் கூறி, பெண்களுக்கான பிறப்புரிமையை நிலைநாட்டினார்கள்.  பெண்பிள்ளைகளை உயிரோடு புதைப்பவர்களை எச்சரிக்கை செய்யுமுகமாக அல்லாஹ் திருக்குர்ஆனில், “உயிரோடு புதைக்கப்பட்ட பெண்குழந்தை என்ன பாவத்தின் காரணமாகக் கொல்லப்பட்டது என்று கேட்கப்படும்“ (81: 8-9) எனக் கூறுகின்றான். ஆகவே பெண்பிள்ளைகளை உயிரோடு புதைப்பவர்களை அல்லாஹ் மறுமையில் சும்மா விட்டுவிடமாட்டான். அதற்கு உரிய விசாரணையும் உண்டு; உரிய தண்டனையும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.  ...

#இமாம் #இமாமத் #ஆலிம் #பள்ளிவாசல் #மஸ்ஜித்

முன்னோடி இமாமாக இருப்போம் -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 ----------------------------------------- மக்கள் அனைவரும் அணியணியாக நிற்க, ஒரே இறைவனை ஒரே திசை நோக்கி ஒரே நேரத்தில் ஒன்றாகத் தொழச் செய்கின்ற பணிதான் ‘இமாமத்’ பணி ஆகும். ஒரு பகுதியில் (மஹல்லா) வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த ஒரே சமுதாயமாக வாழ்வதற்கான முன்னோடிதான் கூட்டுத்தொழுகை. அந்தக் கூட்டுத் தொழுகையை ஒவ்வொரு நாளும் முன்னின்று நடத்துபவர்தாம் இமாம்.   தொழுகை கடமையாக்கப்பட்டது முதல் தம் வாழ்நாளின் இறுதி வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இமாமாக இருந்து மக்களுக்குத் தொழுகை நடத்தியுள்ளார்கள். நபியவர்களைப் பின்பற்றி அதே பணியை நான்கு கலீஃபாக்கள் செவ்வனே செய்திருக்கின்றார்கள். அதன்பின் வந்தவர்கள் அதே வழியைப் பின்பற்றி இமாமாக இருந்துள்ளார்கள். அதுவே இன்று வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்கிறது. நன்மை தீமைகளில் பங்குண்டு: ஒருவர் ஒரு பகுதியில் இமாமாகப் பணியாற்றுகிறார் என்றால் அப்பகுதி மக்களின் நன்மை தீமைகளில் அவருக்குப் பங்குண்டு. எனவே அவர்களின் நன...

#கீரனூர் #பள்ளிவாசல்#மினாரா#keranor#minara#masjith#pallivasal

படம்
✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤                 _*கீரனூர்.*_ ✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤✤ இந்த ஊரின் மிக பெரும் சிறப்பு அற்புதமான அழகான பள்ளி வாசல் ஒன்று உள்ளது, இந்த பள்ளி 1906 ல் முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் மிக நேர்த்தியாக அழகாக கட்டபட்டுள்ளது, இந்த பள்ளி அன்றைய காலத்தில்12ஆண்டுகளாக கட்டி முடித்துள்ளார்கள், சிமெண்டோ மணல்களோ கலக்காமல் கிரானைட் (மார்பல்) கற்கலாலேயே மிக பிரமாண்டமாக கட்டபட்ட அற்புதம், பல வண்ண கற்கலால் அழகிய வேலைபாடுடன் அமைத்துள்ளது இப் பள்ளிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மேலும் இப்பள்ளியின் தூன்கள் சுமார் 30 அடி உயரம் உள்ள ஒரே கல்லில் செதுக்கபட்டு 6 தூண்கள் நிறுவி உள்ளார்கள், அந்த தூண்களை பார்த்தால் ஆச்சரியம் நிலவுகிறது, இக் கற்கள் அனைத்தும் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்களை உபயோக படுத்தி உள்ளார்கள், இப்பள்ளியில் உள்ள ஜன்னல் கம்பிகள் செம்பு பித்தாளையில் அழகிய வேளைப்பாடுடன் அமைத்துள்ளது கண்களை கவருகிறது, இரண்டு மினாராக்கள் அழகிய வேலைபாடுகளுடன் கம்பீரமாக காட்சி தருக...