வாழும் மகான்கள்
*மறைந்தும் உடல் அழியா மகான்கள்* "பதின்மூன்று நூற்றாண்டுகளாக பழுதடையாமலிருந்த இரு புனித உடல்கள்..." பக்தாதிலிருந்து 40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதன் காரணமாக அந்த ஊர் "ஸல்மான் பாக்" என்று அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயர் "மதாயின்". இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல் யமான் (றழியல்லாஹு அன்ஹு) ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள் உள்ளன. அருகே தஜ்லா நதி ஓடுகிறது. ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரில் தண்ணீர் புகுந்தது. ஹஸ்ரத் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது. இந்த நிலையில் முதலாம் ஷா ஃபைசல் மன்னர் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு ஸஹாபாக்கள் தோன்றி "எங்களின் கப்ருகளை இடமாற்றுங்கள்" என்று கூறினார்கள். முஃப்தி சாஹிப் அவர்கள் கப்ரை தோண்டி புனித உடல்களை அங்க...