*இது நிஜமல்ல கதை இதை நிஜமாக நாம் இந்தியாவில் ஆக்கிவிடக்கூடாது* முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: *எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்*. நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: *சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன*. கழுதையும் சென்றது. கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது: *நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.* அதற்கு நரி சொன்னது: *சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.* கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது! கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: *நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.* நரி சொன்னது: *நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை ...