மண்ணடி மஸ்ஜிதே மஹ்மூர்
*மண்ணடி மாமூர் பள்ளியின் ருசிகர தகவல்.* *சென்னை மண்ணடி என்றால்* *அனைவருக்கும் நியாபகம் வருவது அங்கப்பன் நாயக்கன் தெருவில் அமைந்து உள்ள மாமூர் மஸ்ஜித்,* *இதில் அதிராம்பட்டினம்,காயல்பட்டினம்,கீழக்கரை போன்ற ஊர் மக்கள் அதிகளவில் இங்கு தொழுகைக்கு வருவார்கள்.* *அதிரை மக்களுக்கு நன்கு அறிமுகமான பள்ளி என்றே கூறலாம்.இப்பள்ளியின் வரலாறை பார்போம்.....* *சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலின் சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!!* *ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள்..* *இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்????? ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!!* *ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி (சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள் இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....* *இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், ஆனால் அல்லாஹ் ...