#தமிழ் #நபிகள் நாயகம்
 ஆனந்த ஜோதி நபிகள் நாயகம் பேசிய தமிழ் Updated: July 23, 2015 12:51 IST | ஜே.எம்.சாலி      அருணகிரிநாதர் முருகனைச் சிறப்பித்துப் பாடிய திருப்புகழை அடிக்கடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் திருவடிக் கவிராயர். அவருடைய மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள். “திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. உங்களால் ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா?” என்று மாணவர்களைக் கேட்டார். “முடியும்!” என்று முன்வந்தார் மாணவர் காசிம். “உன்னால் அதைச் செய்ய முடியாது” என்று மறுத்தார் ஆசிரியர். “உங்கள் ஆசி கிடைத்தால் நான் ஒரு திருப்புகழைப் பாடி முடிப்பேன்!” என்று உறுதியுடன் சொன்னார் காசிம். “உன்னால் முடிந்தால் ஒரு திருப்புகழை இயற்று!” என்று அன்புடன் கூறினார் திருவடிக் கவிராயர். இது கதையல்ல, முந்நுாறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். நபிகளின் முதல் வார்த்தை நபிகள் நாயகத்தின் பேரில் திருப்புகழைப் படைக்க முடிவு செய்தார் காசிம் புலவர் அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது. அதனால், முறையாக இறைவனைத் தொழுது, நபிமணியின் நல்லாசியுடன் பாட ...