குனூத்
*குனூத்* *-ஓர் ஆய்வு-* ➖➖➖➖➖➖➖➖➖ கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,* பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. ➖➖➖➖➖➖➖➖➖➖ இன்று நவீன வாதிகளால் பிரச்சினையாக்கப்பட்டுள்ள விஷயங்களில் குனூத்தும் ஒன்று. ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத். ஆனால் குனூத்திற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை என அங்கலாய்கின்றனர். ஹதீஸ்களை மெத்தப்படித்துக் தேர்ந்த இந்த மேதைகள்(?) ஹதீஸ்களில் தராதரங்களைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத அப்பாவிகள் நபிமொழிகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றுவிட்டவர்களைப் போன்று பசப்பு வார்த்தைகளால் பாமர மக்களின் உள்ளத்தில் விஷ வித்துக்களை தூவி அவர்களை குழப்பி அற்ப சுகம் காணுகின்றனர். சவூதியின் சாக்கடைக் கொள்கைகளை பிரசாரம் புரிந்து தேவைக்கதிகமாக சொத்து சேர்த்து விட்டாயே! இன்னும் ஏனிந்த குழப்பங்களைச் செய்கின்றாய்? என வஹ்ஹாபிஸ கைக்கூலியிடம் நண்பரொருவர் தன் வேதனையை வெளிப்படுத்தியபோது அந்த ஏஜென்ட் எனக்குக் கூலி கிடைக்கிறது. அதற்கான வேலையைச் செய்கிறேன். மக்கள் குழம்பினால் அதற்கு நானா பொறுப்பு? எனப் ...