இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து முஸ்லீம் ஒற்றுமை

Hvf பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத்தெரியும், ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும். “நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம் முஸ்லீம் பால்தான்!” -சொன்னவர் வாலி ! - “நினைவு நாடாக்கள்” – வாலியின் அனுபவங்கள் ...! இதோ..வாலியின் வார்த்தைகளில் : “என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே - என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது! இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்? அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் என் தந்தையுடன் பணி புரிந்த ,இப்ராஹிம் என்பவரின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார். அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள். இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்! சென்னைக்கு வந்...